Friday, March 26, 2010

HI-KOO

குடை..!
கிழிந்து விட்டது குடை,
இனி அழகாய் ரசிக்கலாம்
-மழை


பால்..!
பாலுக்காக அழும் குழந்தை
பால் குடிக்கும் பிள்ளையார்
இப்படிக்கு- சமுதாயம்


சத்தம்...!
துப்பாக்கியின் உண்மையான சத்தம் ,
போரில் அடிப்பட்ட
குழந்தையின் அழுகையில் கேட்கிறது..!


கொலை...!

கொலை செய்துவிட்டு உறங்கினேன்,
இரவில் கொசுக்கள்...


நிகழ்வுகள்...!
யாரும் தொடவில்லை...!
யரும் பறிக்க வில்லை..!
ஆயினும் ,
இலைகள் உதிரும்...!




கரிப்பு....!
"அம்மா ,கடல் ஏன் கரிக்கிறது"
என கேட்ட மகனை நோக்கி
ஈழத்தமிழ் தாய் சொன்னாள்,
-" நமது கணணீரில்" என்று..!


காலயந்திரம்...!

நினைத்த வேளையில்,
நினைத்த காலத்திற்கு
இட்டு செல்லும்,
நினைவுகள்-ஓர் காலயந்திரம்..!


உழைப்பின் நிழல்...!

உழைப்பின் நிழலில் தினமும் உறங்கும்,
மனிதன் - கீழே,
மின்விசிறி-மேலே...!

மரணம் ஜனனம்...!

உயிரற்ற்வருக்காக்
உயிர்க்கொண்டவைகள்
சாகடிக்கப்படுகின்றன
சவ ஊர்வல்த்தில் பூக்களாய்..!

ஆனால்,
கல்லறையிலும்
உயிர்தெழுகிறது
பூக்கள்..!

என் கவிதைகள். ....

முத்த கல்வி.....
முத்த கல்வி நடக்கிறது வகுப்பறையில்,
அதனால் கல்வி ஒளி எங்கும் பிறக்கிறது ,
-கரும்பலகையில் சாக்பீஸ் ....!

கோபம்....
காற்றுகூட ஒரு நாள்
என் மீது கோபம் கொண்டது,
அப்போது தெரிந்தது
நான் இறந்து விட்டேன் என்பது...!

வேள்வி....
மரம் வெட்டி நடக்கிறது,
மழை வர வேண்டி வேள்வி...!

கனவு..!
விழித்திருந்தேன்,
உறங்கிவிட்டேன்,
எழுந்து பார்த்தால் கனவு...!

வாசம்...!
பூவாசம் தந்த,
ஆசையில் பிறந்த
ஓசைகள் நாம்...!

கொலை...!
கொலை செய்துவிட்டேன்,
குற்றம் யாருடையது
கத்தியுடையதா...?
என்னுடையதா..?